ஸ்லோகம் 95
புராராதே-ரந்த: புரமஸி ததஸ்-த்வச்சரணயோ:
ஸபர்யா-மர்யாதா தரலகரணானா மஸுலபா
ததா ஹ்யேதே நீதா: சதமகமுகா: ஸித்திமதுலாம்
தவ த்வாரோபாந்த-ஸ்திதிபி-ரணிமாத்யாபி-ரமரா:
இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி வழிபட இயலாது (இஷ்டப்ராப்தி)
(த்வம்) நீ (புராராதே:) முப்புரங்களையும் எரித்த பரமசிவனுடைய (அந்த: புரம்
அஸி) அந்தப்புரத்தில் உள்ள பட்டமகிஷியாக விளங்குகிறாய். (தத:) அதனால் (த்வத் சரணயோ:)
உன்னுடைய பாதங்களில் (ஸபர்யா-மர்யாதா) நெருங்கிப் பூஜை செய்யும் முறை (தரல-கரணானாம்)
அடங்காத சித்தமுடையவர்களுக்கு (அஸுலபா) அடையக் கூடியதன்று. (ததா ஹி) அதனால் தான் (ஏதே)
இந்த (சதமக-முகா) இந்திரன் முதலான (அமரா:) தேவர்கள் (தவ) உன்னுடைய (த்வாரோபந்த-ஸ்திதிபி)
வாயிற்புரத்தில் இருக்கும் (அணிமாத்யாபி:) அணிமா முதலிய தேவதைகளால் தடை செய்யப்பட்டவர்களாயினும்
பூஜை செய்ய விரும்பி வந்ததால் (அதுலாம் ஸித்திம்) அணிமா முதலிய நிகரற்ற சித்திகளை
(நீதா:) அடையும் படி செய்விக்கப்பட்டார்கள்.
இந்திரிய நிக்கிரம் செய்து காமத்தை வென்றவர்களுக்குத்தான் தேவியை நெருங்கிப்
பூஜை செய்ய அதிகாரம் உண்டு. இந்திரன் முதலான தேவர்களும் தேவியின் சமீபம் சென்று பாதாரவிந்தங்களில்
பூஜை செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்ட போதிலும் அவ்வாசை பூர்த்தியடைவதில்லை. வெளிவாயிலில்
நின்று சேவைபுரியும் அணிமாதி சித்திகளால் இந்திராதி தேவர்கள் அங்கேயே நிறுத்தப்படுகிறார்கள்.
சித்திகளை அடைந்து அதற்கு மேல் செல்லத் தகுதியற்றவர்களாகின்றனர்.

No comments:
Post a Comment