ஸ்லோகம் 74
வஹத்யம்ப ஸ்தம்பேரம-தனுஜ-கும்பப்ரக்ருதிபி:
ஸ்மாரப்தாம் முக்தாமணிபி-ரமலாம் ஹாரலதிகாம்
குசாபோகோ பிம்பாதர-ருசிபி-ரந்த: சபலிதாம்
ப்ரதாப-வ்யாமிச்ராம் புரதமயிது: கீர்த்திமிவ தே
மார்பில் விளங்கும் முத்துமாலை (நற்கீர்த்தி)
(அம்ப) அம்மா! (தே) உன்னுடைய (குசாபோக:) நகில்களின் மத்தியப்பிரதேஸ்ம்
(ஸ்தம்பேரம-தனுஜ) கஜாசுரனுடைய (கும்ப-ப்ரக்ருதிபி) கும்பத்தில் இருந்து உண்டான (முக்தாமணிபி:)
சிறந்த முத்துக்களால் (ஸமாரப்தாம்) ஆக்கப்பட்டதும் (அமலாம்) குற்றமற்றதும் (பிம்பாதர-ருசிபி:)
கோவைப் பழம் போல் சிவந்த உதட்டின் காந்தியால் (அந்த: சபலிதாம்) உள் புறம் விசித்திரமான
வர்ணங்களோடு பிரகாசிப்பதாயும் (புரதமயிது) முப்புரங்களையும் அழித்த பரமசிவனுடைய (ப்ரதாப-வ்யாமிச்ராம்)
பிரதாபத்தோடு கலந்த (கீர்த்திம் இவ) கீர்த்தியே மாலையாக வந்ததோ என்று விளங்குவதாயும்
உள்ள (ஹாரலதிகாம்) கொடிபோன்ற ஹாரத்தை (வஹதி) தாங்குகிறது.
முத்துக்கள், முத்துச்சிப்பி, யானையின் தலை, நல்லபாம்பின் தலை, மூங்கில்,
கரும்பு, மேகம் என்ற ஆறு இடங்களில் உண்டகும் என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. யானையின்
தலையில் தோன்றும் முத்து கற்பூர வர்ணமுடையது. கஜாசுரனைப் பரமசிவன் கொன்றபின் அவன் தலையில்
இருந்த முத்துக்கள் எடுக்கப்பட்டு தேவிக்கு மாலையாக்கப்பட்டன. அம்முத்துக்களின் தேவியின்
உதட்டுச் சிவப்புப் பிரதிபலித்து வெள்ளையும் சிவப்பும் கலந்து பிரகாசிக்கலாயின. வெள்ளை
ஸத்கீர்த்திக்கும் சிவப்பு வெற்றிப் பிரதாபத்திற்கும் அடையாளமாகக் கவிகளால் கொள்ளப்படுவதால்,
இவ்வர்ணங்களின் கலப்பு தேவியின் மார்பகத்தில் பரமசிவனுடைய புகழும் வீரமுமே அணிகலனாய்
விளங்குவது போல் தோற்றமளித்தது.

No comments:
Post a Comment