Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 94

 

ஸ்லோகம் 94

 

கலங்க: கஸ்தூரீ ரஜநிகர-பிம்பம் ஜலமயம்

கலாபி: கர்ப்பூரைர்-மரகதகரண்டம் நிபிடிதம் |

ஆதஸ்-த்வத்போகேன ப்ரதிதின-மிதம் ரிக்தகுஹரம்

விதிர்-பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே ||

 

தேவியின் உபயோகத்திற்காக நிரப்பப் பெற்ற ஜலபாண்டம் போன்றது சந்திரபிம்பம் (இஷ்டப்பிராப்தி)

 

(இதம்) இந்த (ரஜநிகர-பிம்பம்) வானில் சந்திரமண்டலமாய்த் தோன்றுவது (ஜலமயம்) பிரதிபலிக்கும் ஜலம் நிறைந்த (மரகதகரண்டம்) மரகதப்பாண்டம்; (கலாபி:) கிரணங்களாகிய (கர்ப்பூரை:) பச்சைக் கற்பூரத்தால் (நிபிடிதம்) நிறைவு செய்யப்பட்டது. (களங்கா:)களங்கமாய்த் தோன்றுவது (கஸ்தூரி). (அத:) ஆகையால் (ப்ரதிதினம்) தினந்தோறும் (த்வத் போகேன) உனது உபயோகத்தால் (ரிக்த-குஹரம்) காலியாகும் அப்பாண்டத்தை (விதி:) பிரம்மா (பூய: பூய) மீண்டும் மீண்டும் (தவ க்ருதே) உனக்காக (நூநம்) நிச்சயம் (நிபிடயதி) நிரப்பி வைக்கிறார் என்று தான் நான் கருதுகிறேன்.

 

தேவியை உலகுக்கெல்லாம் காரணமாய் வர்ணிக்கும் ஆசாரியர் பிரம்மாண்டத்தை தேவியின் கிருகமாகவும் ஆகாயத்தை விதானமாகவும், மேரு முதலிய ஸ்தானங்களை விளையாட்டு இடங்களாகவும், நக்ஷத்திரங்களை ஹாரமாகவும், கோத்ரப் பிரவர்த்தகர்களைப் பேரன்மார்களாகவும், பிரும்மா முதலியவர்களைப் புத்திரர்களாகவும், சூரியனை வீட்டு விளக்காகவும் வர்ணிக்கையில் குளிர்ந்த ஒளி தரும் சந்திரன் தேவிக்கு வாசனைத் திரவியங்கள் வைக்கும் சிமிழாகிறான்.

 


 

 

No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...