ஸ்லோகம்
67
கராக்ரேண
ஸப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா
கிரீசேனோதஸ்தம் முஹுரதரபானாகுலதயா
கரக்ராஹ்யம் சம்போர்-முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம் ப்ரூமஸ்-தவ சுபக-மௌபம்ய-ரஹிதம்
முகவாய்க்கட்டையின்
சிறப்பு
(தேவியின் பிரஸன்னம்)
(கிரிஸுதே)
மலையரசன் பெண்ணே (துஹினகிரிணா) இமவானால் (வத்ஸலதயா) வாத்ஸல்யத்துடன் (கராகரேண)
நுனிக்கையால் (ஸ்பருஷ்டம்) தொடப்பட்டதும் (கிரிசேன) பரமசிவனால் (அதரபானாகுலதயா) அதரபானம்
செய்யும் ஆவலுடன் (முஹூ:) அடிக்கடி (உதஸ்தம்) உயர்த்தப்பட்டதும் (சம்போ)
பரமசிவனுடைய (கரக்ராஹ்யம்) கையால் அங்ஙனம் தொடுதற்குரியதும் (ஔபம்ய-ரஹிதம்)
உவமையற்றதும் (முக-முகர-வ்ருந்தம்) முகமாகிய கண்ணாடிக்குப் பிடி போன்றதும் ஆகிய
(தவ) உன்னுடைய (சுபுகம்) முகவாய்க்கட்டையை (கதம் காரம்) எப்படித்தான் (ப்ரும:)
வர்ணிப்போம்?
வாத்ஸல்யத்தினால் இமவானால் தொடப்பட்டதும், பிரேமையால் பரமசிவனால் தொடப்பட்டதுமான
முகவாய்க்கட்டையின் பெருமை இங்கு வர்ணிக்கப்படுகிறது. அது ஒப்புயர்வற்ற அழகு
வாய்ந்தது.

No comments:
Post a Comment