ஸ்லோகம் 88
பதம் தே கீர்த்தீனாம் ப்ரபத-மபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடின-கமடீ-கர்ப்பர-துலாம் |
கதம் வா பாஹுப்யா முபயமனகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா ||
மென்மையான பாதத்தைப் பரமசிவன் அம்மியில் ஏற்றியதால் அவர் கல்நெஞ்சர்
போலும் (துஷ்டமிருகங்களின் வச்யம்)
(தேவி) தேவியே! (தே) உன்னுடைய (ப்ரபதம்) பாதங்களின் முன்பாகம் (கீர்த்தீனாம்)
நீ அடியார்களை காக்கின்றாய் என்ற கீர்த்திக்கு (பதம்) உறைவிடம். (விபதாம்)அடியார்களுக்கு
ஏற்படும் விபத்துக்களுக்கு (அபதம்) இடம் அளிக்காமல்
இருப்பது - கருணையால் அங்ஙனம் மிகவும் மென்மையானதாக இருக்கையில் அதற்கு – (ஸத்பி:)
ஸாதுக்களாகிய கவிகளால் (கடின-கமடீ-கர்ப்பர-துலாம்) கடினமான ஆமையோட்டின் உவமை (கதம்)
எப்படி (நீதம்) கற்பிக்கப்பட்டதோ? (தயமானேன மனஸா) தயை நிறைந்த மனதுடைய (புரபிதா) பரமசிவனால் (உபயமன
காலே) விவாக காலத்தில் (யத்பாஹுப்யாம் ஆதாய) அப்பாதங்கள் கைகளால் எடுத்து (த்ருஷ்தி)
அம்மிக் கல்லின் மேல் (கதம் வா) எப்படித்தான் வைக்கப்பட்டதோ?

No comments:
Post a Comment