Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 71

 

ஸ்லோகம் 71

 

நகானா-முத்யோதைர்-நவநலின-ராகம் விஹஸதாம்

கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதமுமே

கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்

யதி க்ரீடல்லக்ஷ்மீ-சரண-தல-லாக்ஷா-ரஸ-சணம்

 

கமலம் போல் சிவந்த கை நகங்களின் காந்தி

(லக்ஷ்மீ கடாக்ஷம்)

 

(உமே) உமா தேவியே! (நகானாம்) நகங்களுடைய (உத்யோதை:) சிறந்த ஒளியினால் (நவ-நலின-ராகம்) அன்றலர்ந்த தாமரையின் சிகப்பை (விஹஸதாம்) ஏளனம் செய்கின்ற (தே) உன்னுடைய (கராணாம்) கைகளின் (காந்திம்) காந்தியை (கதம்) எவ்வாறு (கதயாம:) வர்ணிப்போம்? (கதய) நீயே சொல். (ஹந்த) அது கஷ்டம். (கமலம்) செந்தாமரை (யதி) ஒருவேளை (க்ரீடத்-லக்ஷ்மீ-சரண-தல) தன்னிடம் லீலை புரியும் லக்ஷ்மியின் திருவடியிலுள்ள (லாக்ஷாரஸ-சணம்) செம்பஞ்சுக் குழம்புடன் சேர்ந்தால் (கயாசித்வா) எப்படியோ (கலயா) சிறிதளவாவது (ஸாம்யம்) ஒற்றுமையை (பஜது) அடையலாம்.


No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...