ஸ்லோகம் 73
அமூ தே வக்ஷோஜா-வம்ருதரஸ-மாணிக்ய-குதுபௌ
ந ஸந்தேஹஸ்பந்தோ நகபதி-பதாகே மநஸி ந:
பிபந்தௌ தௌ யஸ்மாதவிதித-வதூஸங்க-ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரதவதன-க்ரௌஞ்சதலனௌ
நகில்களன்று அவை ஞானாமிருத கலசங்கள்
(பால் வளர்ச்சி, ஜீவன் முக்தி)
(நகபதி-பதாகே) மலையரசின் வெற்றிக் கொடியே! (தே) உன்னுடைய (அமூ) இந்த (வக்ஷோஜௌ)
நகில்கள் (அம்ருதரஸ-) அமிருதரஸம் நிறைந்த (மாணிக்ய-குதுபௌ) ரத்னகலசங்கள். (ந:) எங்களுக்கு
(மனஸி) மனதில் (ஸந்தேஹ-ஸ்பந்த:) அதைப் பற்றிச் சந்தேகம் கொஞ்சம் கூட (ந) இல்லை. (யஸ்மாத்)
ஏனென்றால் (தௌ) அவைகளை (பிபந்தௌ) பருகுகிற (த்விரதவதன-க்ரௌஞ்சதலனௌ) யானை முகத்தோனும்
(அவிதித-வதூஸங்க-ரஸிகௌ) ஸ்திரீஸங்க ரஸத்தை யறியாத (குமாரௌ) குழந்தைகளாகவே (அத்ய அபி)
இன்றைக்கும் இருக்கிறார்கள்.
ந ஸந்தேகஸ்பந்த:- சாதாரணமாகத் தாய்ப்பாலைப் பருகும் குழந்தைகள் பால்யத்தில்
இருந்து யௌவனம் முதலிய பருவ மாறுதல்களை அடைவார்கள். கணபதியும் குமரனும் அப்படி அடையாமையால்
அவர்கள் பருகியது உடலை வளர்க்கும் பாலன்று, மோக்ஷத்தையளிக்கும் அமிருதம் என்பதில் கொஞ்சம்
கூட சந்தேகம் இல்லை.

No comments:
Post a Comment