Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 53

 

ஸ்லோகம் 53

 

விபக்த-த்ரைவர்ண்யம் வ்யதிகரித-லீலாஞ்ஜனதயா

விபாதி த்வந்நேத்ர-த்ரிதய-மித-மீசானதயிதே

புன:ஸ்ரஷ்டும் தேவான் த்ருஹிண ஹரி-ருத்ரானுபரதான்

ரஜ;ஸத்வம் பிப்ரத் தம இதி குணாணாம் த்ரயமிவ

 

மும்மூர்த்திகளைச் சிருஷ்டிக்கும் முக்குணங்களைப் படைத்த கண்கள்

(தேவி ப்ரத்யக்ஷம், ஸகலலோக வச்யம்)

 

(ஈசான-தயிதே) பரமசிவனுடைய அன்பிற்குரியவளே! (வ்யதிகரித-லீலாஞ்ஜனதயா) அழகுக்காக இட்டுக் கொள்ளப்பட்ட மையினால் (விபக்த-த்ரைவர்ண்யம்) மூன்று வர்ணங்களை இன்னும் தெளிவாகப் பிரித்துக் காட்டும் (இதம்) இந்த (த்வத்) உன்னுடைய (நேத்ரத்ரிதயம்) கண் மூன்றும் (உபரதான்) பிரளய காலத்தில் உன்னிடம் ஒடுங்கிய (த்ருஹிண-ஹரி-ருத்ரான்) பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற (தேவான்) தேவர்களை (புன:) மறுபடியும் (ஸ்ரஷ்டும்) தோற்றுவிப்பதற்கு (ரஜ:) ரஜோகுணம் (ஸத்வம்) ஸத்துவகுணம் (தம) தமோகுணம் (இதி) என்ற (குணாணாம் த்ரயம்) மூன்று குணங்களையும் (பிப்ரத் இவ) தரித்துக் கொண்டாற்போல் (விபாதி) விளங்குகிறது.



No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...