Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 54

 

ஸ்லோகம் 54

 

பவித்ரீ-கர்த்தும் ந: பசுபதி பராதீன-ஹ்ருதயே

தயாமித்ரைர்-நேத்ரை-ரருண-தவல-ச்யாம ருசிபி:

நத: சோணோ கங்கா தபன-தனயேதி த்ருவமமும்

த்ரயாணாம் தீர்த்தானா-முபநயஸி ஸம்பேதே-மநகம்

 

மூன்று வர்ணங்களுள்ள கண் ரேகைகள் மூன்று புண்ணிய நதிகளைப் போல்வன (ஸர்வபாப நிவருத்தி, உபஸ்த ரோக நிவாரணம்)

 

(பசுபதி-பராதீன-ஹ்ருதயே) பசுபதிக்கு ஆதினமான உள்ளம் படைத்தவளே! (தயா-மித்ரை: தயைக்குக் கூட்டாளிகளும் (அருண-தவல-ச்யாம-ருசிபி) சிவப்பு, வெளுப்பு, கருப்பு என்ற வர்ணங்களை உடையவைகளுமான (நேத்ரை) உனது கண்களால் (சோண: நத:) மேற்கு நோக்கிச் செல்லும் சிவந்ததுமான சோணபத்ரா என்ற ஆறு (கங்கா) வெளுப்பான கங்கை, (தபன-தனயா) சூரிய புத்திரியாயும் கருப்பு வர்ணமுள்ளதாயும் விளங்கும் யமுனை (இதி) என்ற (த்ரயாணாம்) மூன்று (தீர்த்தானாம்) புண்ணிய நதிகளின் (ஸம்பேதம்) ஸங்கமமாகிய (அனகம்) பாவத்தையெல்லாம் போக்கும் (அமும்) இக்கூட்டுறவை (ந:) உன்னைக் காணும் – எங்களை (பவித்ரீ கர்த்தும்) புனிதமாக்குவதற்காக (உபநயஸி) ஏற்படுத்தியிருக்கிறாய் என்பது (த்ருவம்) நிச்சயம்.

 

இந்த ஸ்லோகத்தில் தேவியின் கண்களிலுள்ள மூன்று வர்ணங்களும், மூன்று புண்ணிய நதிகளுக்கு ஒப்பிடப்படுகின்றன. யமுனை, கருப்பு, கங்கை வெளுப்பு, சோணபத்ரை சிகப்பு. இவை மூன்றின் சங்கமம் ஏற்பட்டால் போலுள்ளது மூன்று கண்களுடன் கூடிய தேவியின் முகமண்டலம். அங்ஙனம் தியானிப்பதால் புண்ணிய தீர்த்தங்களில் எல்லாம் நீராடிய பலன் கிட்டும். எல்லாப் பாவங்களும் விலகும்.

 

பசுபதி பராதீனஹ்ருதயே தயாமித்ரை பவித்ரீகர்த்தும்:- உனது பாதாரவிந்தங்களில் பக்தி செய்பவர்களுக்கு உன்னை விட்டுத் தீர்த்தங்களைத் தேடிச் செல்வது அவசியமில்லை.



No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...