Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 62

 

ஸ்லோகம் 62

 

ப்ரக்ருத்யாSSரக்தாயாஸ்-தவ ஸுததி தந்தச்சதருசே:

ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜனயது பலம் வித்ருமலதா |

ந பிம்பம் தத்பிம்ப-ப்ரதிபலன-ராகாதருணிதம்

துலா-மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா ||

 

உதடுகளின் அழகு ( நல்ல நித்திரை)

 

(ஸுததி) அழகிய பற்களை உடையவளே! (ப்ரக்ருத்யா) இயற்கையாகவே (ஆரக்தாயா:) சிவந்திருக்கிற (தவ) உன்னுடைய (தந்தச்சத-ருசே:) உதடுகளின் அழகுக்கு (ஸாத்ருச்யம்) உபமானம் (ப்ரவக்ஷ்யே) சொல்லுகிறேன். (வித்ரும-லதா) பவழக்கொடி (பலம்) பழத்தை (ஜனயது) உண்டாக்கட்டும். (அது ஒரு வேளை உபமானமாகலாம். ஆனால் பவழக் கொடுக்குப் பழமில்லை) (பிம்பம்) கோவைப்பழமோ என்றால் (தத்-பிம்ப ப்ரதிபலன்-ராகாத்) தேவியின் உதடுகளைப் போலிருக்க வேண்டுமென்று அச்சிவப்பைத் தன்னிடம் பிரதிபலிக்கச் செய்து கொண்டதால் (அருணிதம்) சிகப்பாக இருப்பதால் (துலாம்) சமத்துவத்தை (கலயா) சிறிதளவு கூட (அத்யா ரோடும்) அடைய முயற்சித்தாலும் (கதம் இவ) எப்படித்தான் (ந விலஜ்ஜேத) வெட்கப்படாமல் இருக்கும்.

 

லலிதா சஹஸ்ரநாமம்

நவ-வித்ரும-பிம்ப-ஸ்ரீ-ந்யக்காரி-தசனச்சதா – புதிதான பவழத்தினும் கோவைப்பழத்தினும் சிறந்த காந்தியுடிய உதடுகளை உடையவள்.



 

No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...