Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 97

 

ஸ்லோகம் 97

 

கிராமாஹுர்-தேவிம் த்ருஹிணக்ருஹிணீ-மாகமவிதோ

ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ-மத்ரிதநயாம்

துரீயா காபி த்வம் துரதிகம-நிஸ்ஸீம-மஹிமா

மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம-மஹிஷி

 

பரப்ரம்ம மஹிஷியாகிய நீயே ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் பார்வதியும் (ஜீவன்முக்தி)

 

(பரப்ரஹ்ம மஹிஷி!) பரப்பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியே (ஆகம-வித:) வேதத்தை அறிந்தவர்கள் (த்வாம் ஏவ) உன்னையே (த்ருஹிண க்ருஹிணீம்) பிரம்மாவின் பத்தினியான (கிராம் தேவீம்) வாக் தேவதையாக (ஆஹு:) கூறுகிறார்கள். (த்வாம் ஏவ) உன்னையே (ஹரே:) ஹரியினுடைய (பத்னீம்) பத்தினியான (பத்மாம்) லக்ஷ்மியாகவும், (ஹர-ஸஹசரீம்) சிவனுடைய பத்தினியான (அத்ரி-தனயாம்) பார்வதியாகவும் – (ஆஹு:) கூறுகிறார்கள். (த்வம்) நீயே (துரீயா) இம் மூவருக்கும் அப்பாற்பட்டவனாய் (கா அபி) இத்தகையவள் என்று கூற முடியாதவளாய் (துரதிகம-நிஸ்ஸீம-மஹிமா) அடைதற்கரியதும் எல்லையில்லாததுமான மகிமையுடையவளாய் (மஹா மாயா) மகா மாயை எனப்பட்டவளாய் (விச்வம்) உலகனைத்தையும் (ப்ரமயஸி) ஆட்டி வைக்கிறாய்.

 

துரியா காபி த்வம்:-

 

உன்னுடைய மகிமையை மனதினால் யோசனை பண்ணுவதற்கு கூட முடியாது. ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கிருத்தியத்திற்காக மும்மூர்த்திகளை உண்டு பண்ணி விட்டு இந்த காரியத்திற்கும் மேலாக, அதிதேவதையாக இருப்பது உன்னுடைய ஸ்வரூபம். மூன்றுக்கும் மேலாக நான்காவதாக இருக்கிறவள் நீ தான். கிட்டத்தட்ட நாமம் ரூபம் எல்லாம் மூன்றாவதற்கும் நான்காவதற்கும் ஒன்றாகவே சொல்கிறோம். காமேசுவரனுடைய சக்தியாகிய காமேஸ்வரிக்கும் தூக்கத்திற்கு அதிஷ்டானமான பார்வதிக்கும் பொருத்தம் அதிகம். – காமகோடி சங்கரசாரியார்.


No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...