ஸ்லோகம் 58
அராலம் தே பாலீயுகல-மகராஜன்யதனயே
ந கேஷா-மாதத்தே குஸுமசர-கோதண்ட-குதுகம்
திரச்சீனோ யத்ர ச்ரவணபத-முல்லங்க்ய விலஸன்
அபாங்க-வ்யாஸங்கோ திசதி சரஸந்தான-திஷணாம்
மன்மதபாணம் போன்ற கடைக்கண் பார்வை (காமஜயம், ஸகலரோக நிவருத்தி)
(அக-ராஜன்ய தனயே) பர்வதராஜ குமாரியே ! (தே) உன்னுடைய (அராலம்) வளைந்த (பாலீயுகலம்)
காதுக்கும் கண்ணுக்கும் இடையே உள்ள பிரதேசம் இரண்டும் (குஸுமசர) புஷ்பபாணனான மன்மதனுடைய
(கோதண்ட-குதுகம்) வில் என்ற நம்பிக்கையை (கேஷாம்) யாருக்குத்தான் (ந ஆதத்தே) உண்டாக்காது?
(யத்ர) அந்தப் பிரதேசத்தில் (திரச்சீன:) குறுக்காகச் செல்கின்ற (அபாங்க-வ்யாஸங்க:)
கடைக்கண் பார்வை (ச்ரவண-பதம்) காதுவழியாக (உல்லங்க்ய) ஊடுருவிப் பாய்வதாய் (விலஸன்)
விளங்கிக் கொண்டு (சரஸந்தான-திஷணாம்) பாணம் தொடுக்கப்பட்டுள்ளது என்ற தோற்றத்தை (திசதி)
உண்டாக்குகிறது.
அம்பாளுடைய கடைக் கண்ணழகைத் தியானிப்பவர்களுக்கு ஸகல ஸௌபாக்கியங்களும் சித்திக்கும்.

No comments:
Post a Comment