Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 61

 

ஸ்லோகம் 61

 

அஸௌ நாஸாவம்சஸ் துஹிநகிரிவம்ச-த்வஜபடி

த்வதீயோ நேதீய: பலது பல மஸ்மாக-முசிதம்

வஹத்யந்தர்- முக்தா: சிசிரகர-நிச்வாஸ-கலிதம்

ஸம்ருத்த்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர:

 

மூக்குத்தி முத்தின் அழகு

(மனோஜயம், லக்ஷ்மீகடாக்ஷம்)

 

(துஹினகிரிவம்ச-த்வஜபடி) ஹிமவானுடைய குலமாகிய கொம்பில் பறக்கும் கொடி போன்றவளே! (த்வதீய) உன்னுடைய (அஸௌ) இந்த (நாஸா வம்ச:) மூங்கில் தண்டு போன்ற மூக்கு (அஸ்மாகம்) எங்களுக்கு (உசிதம்) பொருத்தமானதும் (நேதீய:) விரைவில் கைகூடுவதுமான (பலம்) நற்பயனை (பலது) அளிக்கட்டும். (ய:) அந்த மூக்காகிய மூங்கில் தண்டு (அந்த:) உள்ளே (முக்தா:) முத்துக்களை (வஹதி) வைத்துக் கொண்டிருக்கிறது போலும். (தாஸாம் ஸம்ருத்யா) அவ்வாறு முத்துக்கள் நிறைந்திருப்பதால் தான் (பஹி: அபி ச) வெளியிலேயும் (சிசிரகர-நிச்வாஸ-களிதம்) சந்திரநாடி பாயும் இடது நாசியின் வழி வெளியே வரும் மூச்சுக்காற்றினால் கொண்டுவரப்பட்ட (முக்தாமணிதர:) சிறந்த முத்தை அணிந்து கொண்டிருக்கிறது போலும்

 

தேவியின் இடது மூக்கில் உள்ள நல் முத்தாலான மூக்குத்தி அழகிய மூங்கிலின் வெளியில் தோன்றிய முத்துப் போல் இருக்கிறதென்று வர்ணிக்கப்படுகிறது.

 

இவ்விதம் தேவியினுடைய நாஸிகையை தியானம் செய்வதால் பிராணஜயமும் மனோஜயமும் லக்ஷ்மீகடாக்ஷமும் முக்தி ஸாம்ராஜ்யமும் கிட்டும்.

 


 

No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...