Thursday, September 10, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 66

 

ஸ்லோகம் 66

 

விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதானம் பசுபதேஸ்-

த்வயாரப்தே வக்தும் சலிதசிரஸா ஸாதுவாசனே

ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம்

நிஜாம் வீணாம் வாணி நிசுலயதி சோலேன நிப்ருதம்

 

தேவியின் குரல் வீணையினும் இனியது

(இன்சொல், ஸங்கீத ஞானம்)

 

(பசுபதே:) பசுபதியினுடைய (விவிதம்) பல வகைப்பட்ட (அபதானம்) லீலையை (விபஞ்ச்யா) வீணையில் (காயந்தீ) பாடுகின்ற (வாணீ) ஸரஸ்வதி தேவீ (த்வயா) உன்னால் (சலிதசிரஸா) தலையசைப்புடன் (ஸாதுவசனே) ஆமோதிக்கும் வார்த்தையானது (வக்தும்) சொல்வதற்கு (ஆரப்தே) ஆரம்பிக்கப்பட்டபோது (ததீயை) அதனுடைய (மாதுர்யை) இனிமையால் (அபலபித-தந்த்ரீ-கல-ரவாம்) வீணைத் தந்திகளின் அழகிய ஒலி அவமதிப்புற்றதைக் கண்டு (நிஜாம்) தன்னுடைய (வீணாம்) வீணையை (சோலேன) உரையினால் (நிப்ருதம்) வெளியில் தெரியாவண்ணம் (நிசுலயதி) மூடிவிடுகிறாள்.

 

தேவியினுடைய மொழி வீணையினும் இனியதாயிருப்பதால் அதைக் கேட்போம் என்று ஸரஸ்வதி வீணையை மூடிவைத்து விட்டாள். இப்படி தேவியை தியானிப்பதால் வாக்கின் இனிமை சித்திக்கும்.


No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...