ஸ்லோகம் 80
குசௌ ஸத்ய: ஸ்வித்யத்-தடகடித-கூர்ப்பாஸபிதுரௌ
கஷத்தௌ தோர்மூலே கனக-கலசாபௌ கலயதா
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிநா நத்தம் தேவி த்ரிவலி லவலீ-வல்லிபிரிவ
இடையில் கட்டிய கொடியைப் போன்ற மூன்று ரேகைகளின் அழகு (மன்மதனை வெல்லும்
அழகு, இந்திரஜாலம்)
(தேவி) தேவியே! (ஸத்ய) – பரமேஸ்வரனுடைய பெருமையை நினைத்த – அதே க்ஷணத்தில்
(ஸ்வித்யத்) பூரிப்பால் வியர்ந்து (தட-கடித) பக்கத்தில் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கிற
(கூர்ப்பாஸ) ரவிக்கையை (பிதுரௌ) கிழிப்பனவாயும் (தோர்மூலே) தோளின் அடிப்பக்கத்தில்
(கஷ்த்தௌ) உறைகின்றனவாயும் (கனக கலசாபௌ) பொற்குடங்களைப் போன்ற (குசௌ) உனது நகில்களை
(கலயதா) செய்கின்ற (தனுபுவா) மன்மதனால் (தவ) உனது (வலக்னம்) இடுப்பை (பங்காத் அலம்)
ஒடிந்து போகாமல் போதுமான வகையில் (த்ராதும்) காப்பதற்கு (இதி) இருக்கட்டுமென்று (த்ரிவலி)
இடுப்பில் மூன்று மடிப்புகளாகத் தோன்றும் (லவலீவல்லபி:) வள்ளிக் கொடிகளால் (த்ரிதா)
மூன்று தடவை (நத்தம் இவ) சுற்றிக் கட்டப்பட்டது போல் காண்கின்றது.

No comments:
Post a Comment