ஸ்லோகம் 92
கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி-ருத்ரேச்வர-ப்ருத:
ஸிவ: ஸ்வாச்ச-ச்சாயா-கடித-கபட-பரச்சதபட: |
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன-ராகாருணதயா
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் ||
தேவியின் இருக்கை (ஆளுந்திறமை)
(த்ருஹிண-) ப்ரம்மா, (ஹரி-) விஷ்ணு, (ருத்ர-)ருத்திரன், (ஈச்வர-) ஈச்வரன்
ஆகிய (ப்ருத:)அதிகார புருஷர்கள் (தே) உன்னுடைய (மஞ்சத்வம்)வேத ஸ்வரூபமாகிய கட்டிலின்
நான்கு கால்களாக இருக்குந்தன்மையை (கதா:) அடைந்திருக்கிறார்கள். (சிவ:) ஸதாசிவன் (ஸ்வச்சச்சாயா-கடித)
வெண்மையான காந்தியோடு கூடிய (கபட-பரச்சத-பட) மேல் விரிப்பு என்ற வேஷத்துடன் இருக்கிறார்.
(த்வதீயானாம்)உன்னுடைய (பாஸாம்) காந்தியின் (ப்ரதிபலன-ராகாருணதயா) பிரதிபலனத்தால் அவர்
சிகப்பாகத் தோன்றுவதால் (ச்ருங்கார ரஸ:) சிருங்கார ரஸமே (சரீரீ இவ) சரீரம் படைத்து
வந்தது போல் உன்னுடைய கண்களுக்கு (குதுகம்) ஆனந்தத்தை (தோக்தி) அளிப்பவராகிறார்.
சில பாடங்களில் இது 94வது ஸ்லோகமாகவும், அடுத்து வரும் “ஆராலா கேசேஷ” என்பது
92வது ஸ்லோகமாகவும் காணப்படுகின்றன.
ப்ரஹ்மா முதலிய நால்வரும் லோகத்தின் அதிகார புருஷர்களாக இருந்தும் அம்பாளுடைய
ஸமீபத்தில் இருந்து சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையால் கட்டில் கால்களாகவாவது இருப்போம்
என்று அப்படியிருக்கிறார்கள்.
சிவ:- ஸதாசிவ: சக்தி தத்துவமானது
இருபத்தைந்தாவது தத்துவமான ஸதாசிவ தத்துவத்துடன் இரண்டறக் கலந்து இருபத்தாறாவது தத்துவமான
சிவசக்தி ஸாமரஸ்ய “ஸாதாக்ய” தத்துவமாக இருப்பதை (ச்ருங்காரோ ரஸ இவ) சிருங்கார ரஸம்
உருவெடுத்தாற்போல் வெண்மையான ஸதாசிவனும் தேவியின் சாயையால் சிவப்பாகத் தோன்றுபவராய்
தேவிக்கு மகிழ்ச்சியை அளிக்கிறார் என்று இங்கே கூறப்படுகிறது. இதற்கு முன் ஸ்லோகங்களில்
தேவியின் கேசம் முதல் பாதம் வரை வர்ணிக்கப்பட்டது. இங்கு ‘சிவசக்தி ஐக்ய ரூபம்’ கூறப்படுகிறது.

No comments:
Post a Comment