Monday, August 31, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் ஐந்து

 

ஸ்லோகம் ஐந்து

ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜன-ஸௌபாக்ய-ஜனனீம்

புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப-மனயத்|

ஸ்மரோSபி த்வாம் நத்வா ரதி-நயன-லேஹ்யேன வபுஷா

முனீனா-மப்-யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்!!


தேவி பூஜையின் மகிமை (ஸ்த்ரீ புருஷ வசியம்)

(ப்ரணத-ஜன-ஸௌபாக்ய-ஜனனீம்) வணங்கும் ஜனங்களுக்கு ஸகல ஸௌபாக்கியத்தையும் தோற்றுவிக்கும் (த்வாம்) உன்னை (ஹரி:) விஷ்ணு (ஆராத்ய) பூஜித்து (புரா) முன்னொரு சமயம் (நாரீ பூத்வா) பெண் வடிவு கொண்டு (புரரிபும் அபி) முப்புரமெரித்த பரமசிவனையுங்கூட (க்ஷோபம்) மனது சலிக்கும்படி (அனயத்) கவர்ந்தார். (ஸ்மர: அபி ) மன்மதனும் (த்வாம்) உன்னை (நத்வா) வணங்கி (ரதி-நயன-லேஹ்யேன-வபுஷா) ரதிதேவி கண்கொண்டு பருகும் அமுதம் போன்ற வடிவங்கொண்டு (மஹதாம்) மகான்களான (முனீனாம் அபி) முனிவர்களுக்குங்கூட (அந்த:) அந்தரங்கத்தில் (மோஹாய) மதிமயக்கம் உண்டாகும்படி (ப்ரபவதி ஹி) சக்தியுள்ளவனாகிறான் என்பது நிச்சயம்.

ப்ரணத ஜன ஸௌபாக்ய ஜனனீம் – தேவியை ஆராதித்தவர்களில் தலை சிறந்தவர்களாக மகேஸ்வரர், மாதவர், பிரம்மா, மன்மதன், ஸ்கந்தர், நந்திகேசுவரர், இந்திரன், மனு, சந்திரன், குபேரன், அகஸ்தியர், துர்வாஸர் எனப் பன்னிருவர் கூறப்படுவர். தேவியை ஆராதித்த பெருமையால் தேவியே போன்று எல்லோருடைய மனதையும் கவரும் மோகினி வடிவத்தை விஷ்ணு எடுத்துக் கொண்டு பாற்கடல் கடைந்த பின் அமுதத்தைப் பங்கிடும் போது அசுரர்களை மயக்கினார். அந்த மோகினி வடிவத்தைக் காணப் பரமசிவன் விரும்பவே மீண்டும் ஒரு முறை அவருக்காக அந்த உருவத்தைக் காட்டினார். அப்போது தன்னையும் மறந்த பரமசிவன் மோகினியைத் தொடர்ந்தோடித் தழுவிக் கொண்டார் என்று பாகவத புராணமும் மற்ற புராணங்களும் கூறுகின்றன.


No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...