ஸ்லோகம் ஆறு
தனு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விசிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமரு-தாயோதன-ரத:!
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத் தே லப்த்வா ஜகதித-மனங்கோ விஜயதே !!6!!
கடைக்கண் பார்வை ( புத்ர ஸந்தானம்)
(ஹிமகிரிஸுதே) பனிமலையரசன் பெண்ணே! – மன்மதனுடைய – (தனு) வில் (பௌஷ்பம்)
மலர்களாலானது. (மௌர்வீ) நாண்கயிறு (மதுகரமயீ) தேனீக்களாலானது. (விசிகா:) பாணங்கள்
(பஞ்ச) ஐந்தே – அதுவும் பூக்கள் – (ஸாமந்த:) மந்திரி (வஸந்த:) வஸந்தருது, (ஆயோதனரத:)
போர் செய்ய ஏறி வரும் தேர் (மலயமருத்) மலயத்தில் இருந்து வீசும் தென்றல் காற்று (ததா
அபி) அப்படியிருந்தும் (அனங்க:) உடலில்லாத மன்மதன் (ஏக) ஒருவனாகவே (தே) உன்னுடைய (அபாங்காத்)
கடைக்கண் பார்வையால் (காம் அபி க்ருபாம்) எதோ ஒரு கிருபையை (லப்த்வா) அடைந்து (இதம்)
இந்த (ஜகத்) உலகம் (ஸர்வம்) அனைத்தையும் (விஜயதே) ஜயிக்கிறான்.
இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படும் உபாஸனைக்கு ‘அனங்க வித்யா’ என்று பெயர்.
இதற்கு மன்மதன் ரிஷி, அவ்யக்த காயத்ரீச்சந்தம், ராஜராஜேசுவரீ தேவதை. தேவியின் கருணைக்குப்
பாத்திரமானவன் ஒரு ஸாதங்களும் இல்லாவிட்டாலும் உலகையெல்லாம் வெல்லக் கூடியவனாகலாம்
என்பதற்கு மன்மதன் உதாரணம். உடலே இல்லாமல் புஷ்பத்தாலான வில்லையும், அம்புகளையும் கொண்டு
தென்றல் காற்றையே தேராகக் கொண்டு வேறு உதவியில்லாமல் ஒருவனாகவே உலகத்தாருடன் போர் நிகழ்த்தி
மஹாபுருஷர்களைக் கூட ஜயித்து விடுகிறான்.
(அசேதா யச்ச சேதன:! ஸதம் மணி-மவிந்தத்! ஸோSநங்குலி ராவயத்! ஸோSக்ரீவ: ப்ரத்யமுஞ்சத்!
ஸோSஜிஹ்வோ அஸச்சத! தைதம் ருஷிம் விதித்வா நகரம் ப்ரவிசேத்).
அங்கின்மையால் உணர்ச்சியற்றவன் என்றாலும் எல்லா உயிர்களிலும் உள்ளுறைவதால்
சேதனனாய் விளங்குகிறான் மன்மதன். அவன் பிரசித்தமான ஸ்ரீவித்யா ரத்னத்தை அடைந்தான்.
கையில்லாமல் சேர்த்துப் பிடிப்பவனானான். கழுத்தில்லாமல் மணியை அணிந்து கொண்டான். நாக்கில்லாமல்
ருசி பார்த்தான். இப்படிப்பட்ட மந்த்ர த்ரஷ்டாவான ரிஷியை அறியாமல் ஸ்ரீசக்ர பூஜையில்
பிரவேசிக்கலாகாது. (யஜுர்வேதம் – (ஆரூணம் அனு 50)

No comments:
Post a Comment