Monday, September 7, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் பதிமூன்று

 

ஸ்லோகம் பதிமூன்று

நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜடம்

தவாபாங்காலோகே பதித-மனுதாவந்தி சதிச:!

கலத்வேணீபந்தா: குசகலச-விஸ்ரஸ்த-ஸிசயா

ஹடாத த்ருட்யத்-காஞ்ச்யோ விகலித-துகூலா யுவதய:

 

கடைக்கண்ணின் கிருபை (காமஜயம்)

(தவ) உன்னுடைய (அபாங்க-ஆலோகே) கடைக்கண் பார்வையில் (பதிதம்) விழுந்த (நரம்) மனிதனை (வர்ஷீயாம்ஸம்) அவன் வயது சென்றவனாயினும் (நயனவிரஸம்) கண்ணுக்குப் பிடிக்காதவனாயினும் (நர்மஸு) சிற்றின்ப விளையாட்டுக்களில் (ஜடம்) மூடனாயினும் (யுவதய:) யௌவனப் பெண்கள் (களத்-வேணீ-பந்தா:) கூந்தல் முடி கலைந்தவர்களாய், (குச-கலச-விஸ்ரஸ்த-ஸிசயா:) நகில்களின் மேலுள்ள ஆடைகள் நழுவியவர்களாய், (ஹடாத்-த்ருட்யத்-காஞ்ச்ய:) பரபரப்பால் ஒட்டியாணப் பூட்டு கழன்றவர்களாய் (விகிளித-துகூலா:) சேலைகள் நழுவியவர்களாய் (ஸதச:) நூற்றுக்கணக்கானவர்கள் (அனுதாவந்தி) பின் தொடர்கிறார்கள்.


யுவதய: ஓ (கீர்த்தி: ஸ்ரீர்-வாக் ச நாரீணாம்ஸம்ருதிர் மேதா த்ருதி: க்ஷமா) ஸ்த்ரீகளுள் நான் கீர்த்தி, செல்வம், வாக்தேவதையான ஸரஸ்வதி, ஞாபகசக்தி, புத்திசக்தி, திடச்சித்தம், பொறுமை ஆகிய தெய்வீக சக்திகளாக இருக்கின்றேன்.  (பகவத் கீதை 10.34)

 

தேவியினுடைய கடாக்ஷம் எவனிடத்தில் விழுந்தாலும் அவன் காமேசுவரனுடைய அம்சமுடையவனாய் விடுவதால் முன் ஸ்லோகத்தில் தேவஸ்திரீகளும் அப்படிப்பட்ட பக்தனிடம் ஆசை கொள்கிறார்கள் என்று கூறியது போல், ஸ்திரீகளாக வர்ணிக்கப்படும் சக்திகள் எல்லாம் அவனைத் தாமே நாடி அடைகின்றன என்னும் கருத்துக் கவிகளின் பரிபாஷையில் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது என்றும் ஸாதாரண ஸ்த்ரீகள் இவனுக்கு காமவசமாகிறார்கள் எனும் வெளிப்படையான சொல்லர்த்தம் இதில் அடங்கியிருந்தாலும் இதின் உண்மையான நோக்கம் அதுவல்ல என்றும் காணவேண்டும். கீதை கூறும் இன்னொரு கருத்தையும் இத்துடன் ஒப்பிட்டுச் சிந்திக்கலாம்.

எங்கும் நிரம்பியதும் நிலைகுலையாததும் ஆகிய ஸமுத்திரத்தை நதிகள் எவ்வாறு வந்தடைகின்றனவோ அவ்வாறு ஆசைகள் எல்லாம் எவனை அடைகின்றனவோ அவன் அமைதியை எய்துகிறான். ஆசைகளைத் தொடர்பவன் எய்தான். (கீதை 2:70)



No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...