ஸ்லோகம் பன்னிரெண்டு
த்வதீயம் ஸௌந்தர்யம்
துஹினகிரிகன்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே
கதமபி விரிஞ்சி-ப்ரப்ருதய:
யதாலோகௌத்ஸுக்யா-தமரலலனா
யாந்தி மனஸா
தபோபிர்-துஷ்ப்ராபாமபி
கிரிச-ஸாயுஜ்ய-பதவீம்
உவமையற்ற ஸௌந்தர்யம்
(சிவ சாயுஜ்யம், ஊமையும்
பேச)
(துஹினகிரிகன்யே) பனிமலையரசன் பெண்ணே! (கவீந்த்ரா:) கவிசிரேஷ்டர்கள் (விரிஞ்சி-ப்ரப்ருதய:) ஸரஸ்வதீ வல்லபரான பிரம்மா போன்றவர்கள் கூட (த்வதீயம்) உன்னுடைய (ஸௌந்தர்யம்) அழகுக்கு (துலயிதும்) உவமை கூறுவதற்கு (கதமபி) எப்படி எப்படியோ (கல்பந்தே) கற்பனை செய்து பார்க்கிறார்கள் - அவர்களால் முடியவில்லை. (யத்- ஆலோக -ஔத்ஸுக்யாத்) அந்த அழகை அனுபவிக்க ஆசை கொண்டதால் (அமரலலனா) அழகிற்சிறந்த தேவஸ்த்ரீகளும் – பரமசிவனுடைய கண்ணைக் கொண்டு அதைக் காண விரும்பி (தபோபி:) தவமுயற்சிகளால் (துஷ்ப்ராபாம் அபி) அது அடைவதற்கு அரிதாயினும் (கிரிச-ஸாயுஜ்ய பதவீம்) பரமசிவ ஸாயுஜ்ய பதவியை மனஸா மானசீகமாக (யாந்தி) அடைகிறார்கள்.
பரமசிவனுடைய கண்களைத்
தவிர வேறு கண்களால்
பரதேவதையின் அழகை முழுவதும்
அனுபவிக்க இயலாததால் தேவஸ்திரீகள்
பரமசிவனுடன் ஒன்றுபட்டு நிற்கும்
ஸாயுஜ்யப் பதவியை விரும்புகிறார்கள்
எனக் கூறப்பட்டது. சிவ
ஸாயுஜ்யத்தின் பெருமையும் இதனால்
நிருபிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment