ஸ்லோகம் 32
சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார-ஹரய:
ஆமீ ஹ்ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவஸானேஷூ கடிதா
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்
ஸ்ரீவித்தை பஞ்சதசாக்ஷரீ மந்த்ரம் (ஸகல கார்ய ஜயம், தீர்க்காயுள்)
(ஜனனி) தாயே! (சிவ) சிவ பீஜாக்ஷரமான ‘க’, (சக்தி:) சக்தி பீஜாக்ஷரமான “ஏ”,
(காம:) மன்மத பீஜாக்ஷரமான “ஈ”, (க்ஷிதி:) பிருதிவி பீஜமான “ல” (அத:) அதன் பிறகு (ரவி:)
சூரிய பீஜமான ‘ஹ’ (சீத-கிரண:) குளிர்ந்த கிரணங்களுடைய சந்திர பீஜமான “ஸ”, (ஸ்மர:) மன்மத
பீஜமான ‘க’, (ஹம்ஸ:) ஹம்ஸமந்திரத்திலுள்ள ஆகாச பீஜமான ‘ஹ” (சக்ர:) இந்திரனுடைய பீஜமான
‘ல’ (ததனு ச) அதற்குப் பிறகு (பரா-மார-ஹரய:) பராபீஜமாகிய “ஸ”, மன்மத பீஜமாகிய “க”,
ஹரிபீஜமாகிய ‘ல’ (அமீ தே வர்ணா:) உன்னுடைய இவ்வக்ஷரங்கள் (திஸ்ருபி:) மூன்று (ஹ்ருல்லேகாபி:)
புவனேசுவரீ பீஜமான ஹ்ரீங்காரங்களுடன் (அவஸானேஷூ) ஒவ்வொரு கூடத்தின் முடிவிலும் (கடிதா:)
சேர்க்கப்பட்டு (தவ) உன்னுடைய (நாம-அவயவதாம்) மந்திரத்தின் அவயவங்களாக (பஜந்தே) அமைகின்றன.
ஸ்ரீமத்வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா
கண்டாத: கடிபர்யந்த மத்யகூட ஸ்வரூபிணி
சக்தி கூடைசதாபன்ன கட்யதோ-பாக-தாரிணீ (லலிதா சஹஸ்ரநாமம்)
வாக்பவ கூடத்தை அம்பாளுடைய முகமாகவும், மத்தியிலுள்ள காமராஜ கூடத்தைக் கழுத்து
முதல் இடுப்பு வரையிலுள்ள பாகமாகவும் சக்தி கூடத்தை இடுப்பிற்குக் கீழுள்ள பாகமாகவும்
தியானிக்க வேண்டும்.
ஸ்ரீவித்யா – காயத்ரி மந்திரத்தில் ‘பரோ ரஜஸே ஸாலதோம்” எனும் நாலாவது பதத்தைச்
சேர்த்து உத்தம ஸாதகர்கள் ஜபிக்க வேண்டுமென்றும் அப்போது தான் காயத்ரீ வித்தை பூர்ணத்துவத்தை
அடைகிறதென்றும் கூறுவது போல், பஞ்சதக்ஷாரீ மந்திரத்தின் நாலாவது சந்த்ரகலாகூடம் ரமாபீஜமாகிய
“ஸ்ரீம்’ என்றும், அதுவும் சேர்ந்து தான் பதினாறு கலையுடன் இம் மந்திரம் பரிபூர்ணமடைகிறதென்றும்
அதனால் தான் இதற்கு ஸ்ரீவித்யா எனப்பெயர் என்றும் அது ரஹஸ்யமானதால் இங்கு மறைத்து வைக்கப்பட்டதாய்
உணர வேண்டும் என்றும் லக்ஷ்மீதரர் கூறுகிறார். முதல் கூடம் ஜாக்கிரத்திற்கும் இரண்டாவது
ஸ்வப்னத்திற்கும், மூன்றாவது ஸுஷுப்திக்கும் நாலாவது துரியத்திற்கும் ஒப்பிடப்படும்.

No comments:
Post a Comment