Wednesday, September 9, 2020

சௌந்தயலஹரி ஸ்லோகம் 18

 

ஸ்லோகம் 18

 

தனுச்சாயாபிஸ்-தே தருண-தரணி-ஸ்ரீ ஸரணிபிர்-

திவம் ஸர்வா-முர்வீ-மருணிமனி மக்னாம் ஸ்மரதி ய:!

பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வன-ஹரிண-சாலீன-நயனா:

ஸஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வர்ண-கணிகா:

 

அருணரூப த்யானம் (காமஜயம்)

 

(தருண-தரணி) உதய சூரியனது போன்ற (ஸ்ரி-ஸரணிபி:) அழகு வெள்ளத்துடன் கூடிய (தே) உனது (தனு-ச்சாயாபி:) தேக காந்தியின் கிரணங்களால் (ஸர்வாம்) எல்லாம் (திவம்) தேவலோகத்தையும் (உர்வீம்) பூலோகத்தையும் (அருணிமனி) இளஞ்சிகப்பு வர்ணத்தில் (மக்னாம்) முழுகினவைகளாக (ய:) எவன் (ஸ்மரதி) தியானம் செய்கிறானோ (அஸ்ய) அவனுக்கு (த்ரஸ்யத்) பயந்த (வன-ஹரிண-சாலீன-நயனா:) காட்டுமான்களுடையது போன்று அழகிய கண்களுடன் கூடிய (கீர்வாண- கணிகா:) அப்ஸரஸ்திரீகள் (ஊர்வச்யா ஸஹ) ஊர்வசி உட்பட (கதி கதி) எத்தனை எத்தனை பேர்கள் தான் (வச்யா:) வசப்பட்டவர்களாக (ந பவந்தி) ஆகமாட்டார்கள்?

 

தருண-தரணி-ஸ்ரீ ஸரணீபி:- தருண தரணிர்-பால-ஸூர்ய: தஸ்ய ஸ்ரீ: சோபா தஸ்யைவ ஸ்ரீ ஸரணி: மார்க்க: ஸௌபாக்யமிதி யாவத்!

 

அருணிமனி மக்னாம்:- அருணிமணி ஆருண்யே மக்னாம் அத்யருணா-மிதியாவத்! யத்வா அருணிம-நிமக்னாம் திவமாகாசம் ஸர்வாமுர்வீம் நிதராம் மக்னாம்!

 

இந்த ஸ்லோகம் ஸ்த்ரீ வச்யகரம் என்று சொல்லப்படும். ஆனால் ‘ஸ்த்ரிய: ஸமஸ்தாஸ் தவ தேவி பேதா:’ என்றபடி எல்லா ஸ்திரீகளும் பரதேவதையின் வடிவங்களே யாதலால் உபாஸகன் அவர்களை அங்ஙனமே கண்டு வணங்குவான். காமத்தால் ஸ்திரீகளுக்கு வசமாகமாட்டான்.

 


 

 

No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...