ஸ்லோகம் 31
சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல-மதிஸந்தாய புவனம்
ஸ்திதஸ் தத்தத்-ஸித்தி-ப்ரஸவ-பரதந்த்ரை: பசுபதி:
புனஸ்-த்வந்நிர்ப்பந்தா-தகில-புருஷார்த்தைக-கடனா-
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவாதீதர-திதம்
அறுபத்து நாலு தந்திரங்களும் ஸ்ரீவித்தையும் (ஸர்வ வசீகரம்)
(பசுபதி:) பரமசிவன் (தத்-தத்-ஸித்தி-ப்ரஸவ) அவரவர் நாடும் அந்தந்த சித்தியை
மட்டும் அளிக்கும் (பரதந்த்ரை:) வேறு தந்திரங்களாகிய (சதுஷ்ஷஷ்ட்யா தந்த்ரை:) அறுபத்து
நாலு வகைப்பட்ட தந்திர சாஸ்திரங்களால் (ஸகலம்) எல்லா (புவனம்) உலகத்தையும் (அதிஸந்தாய)
நிரப்பிவிட்டு (ஸ்தித:) வாளாவிருக்கவே (புன:) மேலும் (த்வத்-நிர்ப்பந்தாத்) உன்னுடைய
கட்டாயத்தின் பேரில் (அகில புருஷார்த்த-ஏக-கடனா-) எல்லா விருப்பங்களையும், அறம் பொருள்
இன்பம் வீடு என்ற எல்லாப் புருஷார்த்தங்களையும், ஒருங்கே கூட்டி வைக்க (ஸ்வதந்த்ரம்)
வல்லதான (தே தந்த்ரம்) உன்னுடைய தந்திரமாகிய (இதம்) இந்த ஸ்ரீவித்தையை (க்ஷிதிதலம்)
பூவுலகில் (அவாதிதரத்) அவதரிக்கச் செய்தார்.
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் :- இது
“ஸமயாசாரம்’ எனப்படுவது; வஸிஷ்டர், ஸநகர், சுகர், ஸநந்தனர், ஸநத்குமாரர் ஆகிய ஐவர்கள்
அருளிய “சுபாகம பஞ்சகம்’ எனப் பெயர் பெற்ற ஸம்ஹிதைகளில் போதிக்கப்பட்ட மார்க்கம். அறுபத்து
நாலு தந்திரங்களில் சொல்லியிருப்பது ‘கௌல மார்க்கம்’. ‘சந்த்ரகலாவித்யாஷ்டகம்’ எனப்பட்ட
எட்டுத் தந்திரங்களில் சொல்லியிருப்பது ‘மிச்ரமார்க்கம்’. ஸமய மார்க்கம் தான் வைதீகர்கள்
அனுஷ்டிக்கத் தகுந்தது. இது தான் அடுத்த சுலோகத்தில் கூறப்படும் வித்தை. இது எல்லாப்
புருஷார்த்தங்களையும் சாதிக்க வல்லது.
அறுபத்து நாலு தந்திரங்கள்
மஹாமாயா, சம்பரம், யோகீனி ஜால சம்பரம், பைரவதந்திரம் எட்டு, பஹுரூபதந்த்ரம்
(எட்டு) யாமள தந்த்ரம் (எட்டு) சந்த்ரஞானம், மாலினி, மஹாஸம்மோஹனம் முதலியன. இவற்றில்
ஒவ்வொன்றும் வச்யம், ஆகர்ஷணம்,மோஹனம், உச்சாடனம் போன்ற ஒவ்வொரு ஸித்தியைத் தருவது.

No comments:
Post a Comment