ஸ்லோகம் 34
சரீரம் த்வம் சம்போ: சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம்
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான-மனகம்!
அத: சேஷ: சேஷீத்ய்ய-முபய-ஸாதாரண தயா
ஸ்தித: ஸ்ம்பந்தோ வாம் ஸமரஸ-பரானந்த-பரயோ:!!
சேஷசேஷீபாவம் (அன்யோன்ய ஸமரஸ வளர்ச்சி)
(பகவதி) பரதேவதையே! (சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம்) சந்திர சூரியர்களை நகில்களாக
உடைய (த்வம்) நீ (சம்போ:) பரமசிவனுக்கு (சரீரம்) உடல் என்றும் (அனகம்) மாசற்ற (நவாத்மானம்)
ஒன்பது வ்யூஹ ஸ்வரூபியான சிவனை (தவ) உன்னுடைய (ஆத்மானம்) உடல் என்றும் (மன்யே) மனக்கண்ணால்
காண்கிறேன். (அத:) ஆகையால் (சேஷ:சேஷீ இதி) உடைமை உடையவர் என்ற (அயம்) இந்த (ஸம்பந்த)
உறவு (ஸமரஸ-பரானந்த-பரயோ) ஸ்மரஸப்பட்ட ஆனந்த பைரவர் ஆனந்த பைரவி என்ற (வாம்) உங்களில்
(உபய-ஸாதாரணதயா) இருவருக்கும் ஸமமாக (ஸ்தித:) நிலை பெற்றுள்ளது.
பின்குறிப்பு: (தேதியூர் ஸுப்ரமண்ய சாஸ்திரி)
இந்த ஸ்லோகத்தை ஜபம் செய்து வரும் குடும்பங்களில் ஸ்திரீ புமான்களுக்கு
பரஸ்பரம் அன்யோன்ய பாவம் திருடமாகும். வேதோக்த கர்மாக்களைச் செய்யும் காலங்களில் புருஷர்களுக்குப்
பிரதான்யமும், குடும்ப விஷயங்களில் ஸ்திரீகளுக்குப் பிராதான்யமும் இருப்பது அவசியம்.
இப்படி ஸமரஸத்துடன் வாழும் கிருஹஸ்தர்கள் ஈசுவரனுடைய அனுக்கிரஹத்தால் ஞானத்தைப் பெற்று
மோக்ஷத்தை அடையலாம்.

No comments:
Post a Comment