ஸ்லோகம் 33
ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதய-மித மாதௌ தவ மனோர்
நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா:|
பஜந்தி த்வாம் சிந்தாமணி-குண-நிபத்தாக்ஷ-வலயா:
சிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி-சதை:
ஸௌபாக்கிய மந்திரம்
(ஸகல ஸௌபாக்கியம்)
(நித்யே) ஆதியந்த மற்ற பரதேவதையே! (தவ) உன்னுடைய (௳னோ:) பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின்
(ஆதௌ) முதலில் (ஸ்மரம்) காம பீஜமான ‘க்லீம்’ என்ற அக்ஷரம் (யோனிம்) புவனேசுவரி பீஜமான
‘ஹ்ரீம்’ என்ற அக்ஷரம் (லக்ஷ்மீம்) லக்ஷ்மீ பீஜமான ‘ஸ்ரீம்’ என்ற அக்ஷரம் (இதம் த்ரிதயம்)
ஆகிய இம் மூன்றையும் (நிதாய) சேர்த்து (நிரவதி மஹாபோக-ரஸிகா:) இடைவிடாத ஜபத்திலுள்ள
ஆனந்தச் சுவையை அறிந்தவர்களாகிய (ஏகே) சிலர் (சிந்தாமணி-குண-நிபத்த-அக்ஷவலயா:) தொடர்ந்து
வரும் சிந்தனையையே ஜபமாலையகக் கொண்டு (சிவாக்னௌ) சக்தி முக்கோணத்திலுள்ள அக்னியில்
(ஸுரபிக்ருத-தாராஹுதி-சதை:) காமதேனு அளித்த நெய் போன்ற ஆத்மானந்தத்தைக் கொண்டு நூற்றுக்கணக்கான
ஆஹுதிகளை (ஜுஹ்வந்த:) செய்பவர்களாய் (த்வாம்) உன்னை (பஜந்தி) ஆராதிக்கிறார்கள்.
பஞ்சதசாக்ஷரீ மந்திரத்திற்கு ஸாவித்ரீ மந்திரத்துடன் ஒற்றுமையுண்டு. பஞ்சதசாக்ஷரியில்
மூன்று கூடங்களில் இருப்பது போல் ஸாவித்ரீ மந்திரத்தில் மூன்று பாதங்கள். அவற்றுடன்
“பூ:புவ”ஸுவ” என்ற மூன்று வியாஹ்ருதிகளைச் சேர்த்தால் அப்போது அது காயத்ரீ மந்திரமாகிறது.
அவ்வாறே பஞ்சதசாக்ஷரிக்கு முன் விமர்சப்ரணவங்கள் எனப்படும் ‘ஐம் – ஹ்ரீம் – ஸ்ரீம்-
க்லீம் – ஸௌ:’ என்பனவற்றில் மூன்றைச் சேர்த்தால் அது ஸௌபாக்ய பஞ்சதசாக்ஷரீ எனப்படும்.
இங்கே “ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லீம்’ என்பவற்றை முங்கூட்டி ஜபிப்பது சிறந்த பயனளிக்கும் எனக்
கூறப்படுகிறது. ஆனால் ஸாதாரணமாக “ஐம்-க்லீம்-ஸௌ:’ என்ற பீஜங்களை முறையே ஒவ்வொருகூடத்தின்
முதலிலும் சேர்ப்பதே “ஸௌபாக்கிய வித்தை” என வழக்கத்தில் காணப்படுகிறது.

No comments:
Post a Comment