ஸ்லோகம் இருபத்தாறு
விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிரார்னோதி விரதிம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்!
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித-த்ருசா
மஹா-ஸம்ஹாரேSஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி-ரஸௌ
பராசக்தியின் பாதிவ்ரத்ய மகிமை
(அகத்திலும் புறத்திலும் சத்துருக்களின் அழிவு)
(விரிஞ்சி:) பிரம்மா (பஞ்சத்வம்) அழிவை (வ்ரஜதி) அடைகிறார்; (ஹரி:) விஷ்ணு
(விரதிம்)முடிவை (ஆப்னோதி) அடைகிறார். (கீனாச:) யமன் (விநாசம்) நாசத்தை (பஜதி:) அடைகிறான்.
(தனத:) குபேரன் (நிதனம்) மரணத்தை (யாதி) அடைகிறான். (மாஹேந்த்ரீ விததி: அபி) ஒருவர்
பின் ஒருவராக வரும் இந்திரர்களின் கூட்டமும் (ஸம்மீலித-த்ருசா) கண்ணை மூடி (விதந்த்ரீ)
பெருந்தூக்கத்தில் ஆழ்கிறது. (அஸ்மின்) அப்படிப்பட்ட (மஹா-ஸம்ஹாரே) மகாப்பிரளய காலத்தில்,
(ஸதி) பதிவிரதையான தாயே! (அஸௌ) இந்த (த்வத்பதி) உனது பதியான ஸதாசிவன் (விஹரதி) உன்னுடன்
விளையாடுகிறார்.
பஞ்சத்வம் – (பஞ்சபூதானாம் வ்யஷ்டி ரூபதாம் மரணமிதி யாவத்) ஐந்து பூதங்களும்
தனித்தனியே பிரிந்து போகும் மரணநிலை.
விரதிம் – உபரதிம் மரணமிதி யாவத்!!
விதந்த்ரீ – விசேக்ஷேண தந்த்ரீ ப்ரமீலனம் ஜாட்யம் யஸ்யா: ஸா-நித்ராந்தேத்யர்த்த:!
மாஹேந்த்ரீவிததி: மஹேந்த்ரஸ்யேயம் மாஹேந்த்ரீ சதுர் – தசானாம் மனூனாம் இந்த்ராணாம்
விததி: அபி ஸங்கோபி ஸம்மீலதி, ஸம்யங்மீலிதா த்ருசா த்ருஷ்டிர்-யஸ்யாஸ்ஸா!
த்வத்பதி – ஸதாசிவ:ஹர: அஸௌ ஹஸஸ்ரதல-கமலே பரித்ருச்யமான:!
மஹாப்ரளய காலத்தில் பிருதிவி முதல் எல்லாத் தத்துவங்களும் அதற்கு மேலுள்ள
தத்துவங்களில் லயமாகிக் கடைசியில் சக்தியும் சிவமும் ஆகிய இரண்டுமே எஞ்சி நிற்கும்.
அப்போது சிவன் ஸம்ஹார தாண்டவம் செய்து கொண்டிருப்பதைப் பராசக்தி மட்டும் பார்த்துக்
கொண்டிருக்கிறார்.

No comments:
Post a Comment