Wednesday, September 9, 2020

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 27

 

ஸ்லோகம் இருபத்தேழு

 

ஜபோ ஜல்ப : சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா

கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனாத்யாஜுதி-விதி:!

ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா

ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம்

 

ஸ்மயாசார மானஸிக பூஜை

(ஆத்மஞான சித்தி)

 

(ஆத்மார்ப்பண-த்ருசா) ஆத்மஸமர்ப்பண பாவனையால் (ஜல்ப:) வெறும் பேச்சு (ஜப:) ஜபமாகவும், (ஸகலம் சில்பம் அபி) கைத்தொழிலனைத்தும் (முத்ரா-விரசனா) முத்திரைகளின் விளக்கமாகவும் (கதி:) நடை (ப்ராதக்ஷிண்ய-க்ரமணம்) பிரதக்ஷிணம் செய்வதாகவும் (அசனாதி) உண்டி முதலியன (ஆஹுதி விதி:) ஹோமமாகவும் (ஸம்வோ:) படுத்துக் கொள்ளுதல் (ப்ரணாம:) நமஸ்காரமாகவும் – இன்னும் (ஸுகம்) சுகமாக முயற்சியின்றி (மே) எனது (யத் விலஸிதம்) செயல் எது உண்டோ (அகிலம் அபி) அது எல்லாம் (தவ) உன்னுடைய (ஸபர்யா-பர்யாய:) பூஜை முறையாகவும் (பவது) ஆகட்டும்.

 

முத்திரைகள்: ஸம்க்ஷோபிணீ, வித்ராவிணீ, ஆகர்ஷிணீ, வசங்கரீ, உன்மாதினீ, மஹாங்குசா, கேசரீ, பீஜ, யோனி, த்ரிகண்டா எனும் பத்து முத்திரைகள் தேவி ஆராதனையில் முக்கியமானவை. “தசமுத்ராஸமாராத்யா” என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. கைவிரல்களின் இயக்கம் எப்படியிருந்தாலும் அது  எல்லாம் ஞானிகள் விஷயத்தில் முத்திரைகளைக் காட்டினதாக ஆகிறது. ஸமயாசாரத்தைக் கொண்ட ஞானிகள் வெளிப்படையாக ஸ்ரீசக்கரத்திலோ பிம்பத்திலோ குறிப்பிட்ட முறைப்படி பூஜையைச் செய்வதில்லை. அவர்கள் இயற்கையாகச் செய்யும் செயல்கள் எல்லாம் பூஜையாகவும், பேசும் பேச்செல்லாம் துதியாகவும் ஆகின்றன.




 

No comments:

Post a Comment

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் 100

  ஸ்லோகம் 100   ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜநவிதி: ஸுதாஸூதேச்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசனா ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி-ஸௌஹித்யகரணம் ...