ஸ்லோகம் இருபத்தி நான்கு
ஜகத்ஸூதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வன்-னேதத் ஸ்வமபி வபு-ரீசஸ்-திரயதி
ஸதா பூர்வ: ஸர்வம் ததித-மனுக்ருஹ்ணாதி ச சிவஸ்
தவாஜ்ஞா-மாலம்ப்ய க்ஷண சலிதயோர்-ப்ரூலதிகயோ:
தேவியின் புருவ அசைப்பு
(ஸர்வ பூதப்ரேத பிசாச பய நிவாரணம்)
(தாதா) பிரம்மா (ஜகத்) உலகத்தை (ஸூதே) சிருஷ்டிக்கிறார், (ஹரி:) விஷ்ணு
(அவதி) ரக்ஷிக்கிறார். (ருத்ர:) ருத்திரன் (க்ஷபயதே) அழிக்கிறார், (ஈச:) மகேசுவரன்
(ஏதத்) இம்மூவரையும் (திரஸ்குர்வன்) தன்னிடம் லயிக்கும்படி செய்து (ஸ்வம்) தன்னுடைய
(வபு: அபி) சரீரத்தையும் (திரயதி) மறையும்படி செய்கிறார். (ஸதா-பூர்வ: சிவ:) “ஸதா”
என்ற அடைமொழியை முன் கொண்ட சிவன் அதாவது ஸதாசிவன் (ஸர்வம் தத் இதம்) அப்படிப்பட்ட இவர்கள்
எல்லோரையும் (தவ) உன்னுடைய (க்ஷண-சலிதயோ:) நொடி நேர அசைப்பினால் தெரிவிக்கப்பட்ட (ப்ரூலதிகயோ:)
புருவக் கொடிகளின் (ஆஜ்ஞாம்) கட்டளையை (ஆலம்ப்ய) அனுசரித்து (அனுக்ருஹ்ணாதி) அனுக்ரஹம்
செய்கிறார்.
சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அனுக்கிரஹம் எனும் ஐந்து தொழில்களை
முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், ஸதாசிவன் ஆகியோர் மூலம் தேவி நடத்துகிறாள்.
ஆகையால் லலிதா சஹஸ்ரநாமத்தில் தேவி ‘பஞ்ச க்ருத்ய பாராயணா’ எனப்படுகிறாள்.
“ஸ்ருஷ்டிகாத்ரீ ப்ரஹமரூபா கோப்த்ரீ கோவிந்தரூபிணீ
ஸம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதானகரீ ஈச்வரீ
ஸதாசிவா அனுக்ரக்ரஹதா பஞ்சக்ருத்ய-பராயணா
குறிப்பு: எல்லா தேவதைகளையும் தனித்தனியாகப் பூஜை செய்வது கூடாமையால் எந்த
ஒரு தேவதையைப் பூஜித்தால் எல்லா தேவதைகளையும் பூஜித்ததாகுமோ அந்த மூலதேவதை அம்பிகை.
இதே கருத்து அடுத்த ஸ்லோகத்திலும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment