ஸ்லோகம் :19
முகம் பிந்தும் க்ருத்வா
குசயுக-மதஸ் தஸ்ய தததோ
ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி
தே மன்மதகலாம்!
ஸ ஸத்ய: ஸம்க்ஷோபம்
நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீ-மப்யாஷு ப்ரமயதி-ரவீந்து
ஸ்தனயுகாம்
காமகலா த்யானம் (காமஜயம்)
(ஹரமஹிஷி) பரமசிவனின் பட்டமஹிஷியே! (பிந்தும்) ஸ்ரீசக்ர மத்தியிலுள்ள
பிந்துவை (முகம்) காமகலாரூபிணியான உனது முகமாக (க்ருத்வா) தியானம் செய்து கொண்டு
(தஸ்ய அத:) அதற்குக் கீழே (குசயுகம்) இரண்டு ஸ்தனங்களையும் (ததத:) அதற்கும் கீழே
(ஹரார்த்தம்) சிவனுடைய பாதி வடிவான யோனியையும் தியானம் செய்து கொண்டு (தே)
உன்னுடைய (மன்மதகலாம்) காமகலையாகிய ‘க்லீம்’ பீஜத்தை (ய:) எவன் (த்யாயேத்) அந்த
அங்கங்களில் தியானம் செய்கிறானோ (ஸ:) அவன் (ஸ்த்ய:) உடனே (வநிதா) காம சக்திகளை
(ஸம்க்ஷோபம் நயதி) வசப்படும்படி செய்கிறான். (இதி) என்பது (அதிலகு) மிகவும் எளிது.
(ரவி-இந்து-ஸ்தன-யுகாம்) சூரிய சந்திரர்களையே ஸ்தங்களாகக் கொண்டுள்ள (த்ரிலோகீம்
அபி) முவ்வுலக வடிவமான மடந்தையையுங் கூட (ஆசு) விரைவில் (ப்ரமயதி) மயங்கச்
செய்வான்.
இந்த ஸ்லோகமும் ஸ்த்ரீ வச்யகரம் என்று சொல்லப்படும். பதினெட்டாவது ஸ்லோகத்தின்
குறிப்பு இங்கும் பொருந்தும். ஹரமஹிஷி-ஹரோபிந்து; தஸ்யமஹிஷி ததாதார-த்ரிகோணரூபிணீதி
கூடார்த்த:!
ஹரார்த்தம்:- ஹகாரார்த்தம் என்றும் பாடமுண்டு. “ஹ’ என்பது ‘ஹம்ஸ:’ என்பதைக்
குறிக்கும். இதில் பாதி உயிரெழுத்துக்கள் ‘ஹம்’ இல் உள்ள ‘அம், ‘ஸ:’ வில் உள்ள அ: ஆகையால்
அது மூன்று பிந்துக்களைக் குறிக்கும். அது மன்மதக்கலை.
‘க்லீம்’ என்ற பீஜத்தில் உயிரெழுத்து ‘ஈ’ அதுவும் மூன்று பிந்துக்களாக்
ஆகியது. மேலுள்ள பிந்து, சந்திரன், கீழுள்ளவை சூரியனும் அக்கினியும்.
இங்ஙனம் காமகலா தியானம் செய்பவன் தேவியின் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறான். வேறு
எண்ணம் இல்லாமல் ஒருமைப்பட்ட மனத்துடன் மூன்று பிந்துக்களை தியானம் செய்பவன் பரமானந்தக்
கடலில் மூழ்கி மீண்டும் கர்ப்பத் துவாரத்தைக் காணமாட்டான்.

No comments:
Post a Comment