ஸ்லோகம் 20
கிரந்தீ-மங்கேப்ய: கிரண-நிகுரும்பாம்ருத-ரஸம்
ஹ்ருதி த்வா-மாதத்தே ஹிமகர-சிலா-மூர்த்திமிவ ய:
ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ
ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்ட்யுர ஸுகயதி ஸுதாதார ஸிரயா
சந்திரகாந்தப் பிரதிமை போன்ற வடிவம்.
(ஸர்வ விஷ ஸர்வ ஜ்வர நிவாரணம்)
(அங்கேப்ய:) எல்லா அவயவங்களில் இருந்தும் (கிரண-நிகுருப-அம்ருதரஸம்) கிரண
ஸமூஹ வடிவில் அமிருத ரஸத்தை (கிரந்தீம்) பெருக்கும் (ஹிமகர-சிலா-மூர்த்திம் இவ) சந்திர
காந்தச் சிலையான மூர்த்தி போன்ற (த்வாம்) உன்னை (ய:) எவன் (ஹ்ருதி) உள்ளத்தில் (ஆதத்வதே)
நிலை நிறுத்தி தியானம் செய்கின்றானோ (ஸ:) அவன் (சகுந்தாதிப: இவ) பக்ஷிராஜனாகிய கருடனைப்
போல் (ஸர்ப்பாணாம்) பாம்புகளின் (தர்ப்பம்) கொழுப்பை (ஸமயதி) அடக்குகிறான். (ஸுதாதார-ஸிரயா)
அம்ருத நாடியோடு கூடியிருக்கும் (த்ருஷ்ட்யா) பார்வையால் (ஜ்வர-ப்லுஷ்டான்) ஜ்வரத்தால்
பீடிக்கப்பட்டவர்களை (ஸுகயதி) பீடை நீங்கி சுகமடையச் செய்கிறான்.
தேதியூர் சுப்ரஹ்மண்ய சாஸ்திரிகளின் பின்குறிப்பு
இந்த சௌந்தர்யலஹரி சுலோகத்தைப் பதினாறு ஆவிருத்திக்குக் குறையாமல் அம்பிகா
தியானத்துடன் சொல்லிக் கொண்டு விபூதியையோ தீர்தத்தையோ அபிமந்த்ரணம் செய்து நோயாகளிடம்
அதைக் கொடுத்து விபூதியானால் தரித்துக் கொள்ளும்படியும், தீர்த்தமானால் உட்கொள்ளும்படியும்
செய்வதாலேயே இந்த பிரயோகத்தைப் பரீக்ஷித்துப் பார்த்து விடலாம். ஸகலரோக நிவருத்தி என்பதில்
சந்தேகமே இல்லை. உபாஸகர்களுடைய திருஷ்டிக்கே ரோகாதிகளை நிவருத்தி செய்து வைக்கும்படியான
வைபவம் சித்திக்கிறது.

No comments:
Post a Comment