ஸ்லோகம் இருபத்தி ஒன்று
தடில்லேகா-தன்வீம் தபன-சசி-வைச்வானர-மயீம்
நிஷண்ணாம் ஷண்ணா மப்யுபரி கமலானாம் தவ கலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மல மாயேன மனஸா
மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்
மின்னல் கொடி போன்ற வடிவம்
(ஸர்வ வசீகரம் ஸாவாஹ்லாத கரம்)
(தடித்-லேகா-தன்வீம்) மின்னல் கொடி போல் சூக்ஷ்மமான தேஜோரூபமுடையதும் (தபன-சசி-வைச்வானர-மயீம்)
சூரியன் சந்திரன் அக்கினி ஆகிய வடிவங்களில் பிரகாசிப்பதும் (ஷண்ணாம் கமலானாம் அபி)
ஆறு ஆதார சக்கரங்களுக்கும் (உபரி) மேலே (மஹாபத்ம-அடவ்யாம்) தாமரைக்காடு போன்ற ஸஹஸ்ரார
சக்கரத்தில் (நிஷண்ணாம்) நிலைபெறுவதுமான (தவ) உன்னுடைய (கலாம்) “ஸாதா” எனப்படும் கலையை
(ம்ருதிக-மல-மாயேன) காமம் முதலிய அழுக்குகளும் அவித்தை முதலிய மயக்கங்களும் நீங்கிய
(மனஸா) மனதினால் (மஹாந்த:) மகான்கள் (பச்யந்த:) கண்டு அனுபவிப்பவர்களாய் (பரமாஹ்லாத-லஹரீம்)
அலைஅலையாக வரும் அளவு கடந்த ஆனந்தத்தை (தததி) அடைகிறார்கள்.
தடில்லேகா-தன்வீம்- தடில்லேகா வித்யுல்லதா தத்வத் தன்வீம் தீர்க்கா ஸூக்ஷ்மா
! ஜ்யோதிர்மயீ க்ஷண-ப்ரபா ச ! ஸ்திர ஸௌதாமின்யா க்ஷணப்ரபாவத்வம் ஆக்ஞா சக்ரே க்ஷணமாத்ரதர்சனாத்!!
குண்டலினீ சக்தி மூலாதாரத்தில் இருந்து படிப்படியாக மேலேறி வரும் போது ஆக்ஞா
சக்கரத்தில் அதிகநேரம் தாமதிக்காமல் மின்ன்ல்கொடி போல் காட்சியளித்து விரைவில் ஸஹஸ்ராரத்தில்
பரமசிவனை அடைகின்றாள். ஸஹஸ்ராரத்தில் நிலையாகக் குளிர்ந்து பிரகாசிப்பதால் ‘ஸ்திரஸௌதாமினீ’
என்றும் ஆக்ஞையில் நொடி நேரம் பிரகாசிப்பதால் ‘க்ஷண ஸௌதாமினீ’ என்றும் கூறப்படுகிறாள்.
ம்ருதித-மல-மாயேன மனஸா-ம்ருதிதா: க்ஷபிதா: மலா: காமாதய: மாயா அவித்யா-அஸ்மிதா-அஹங்காராதய:
யஸ்ய தத், தேந மனஸா அந்த: கரணேன!!
இந்த உபாஸனையைச் செய்கிறவர்கள் தேஹத்தை ஆத்மா என்று எண்ணும் அவித்தையையும்,
தான் பெரியவன் என்ற அஹங்காரத்தையும் விருப்பு
வெறுப்புகளையும் சாகாமல் இருக்க வேண்டுமென்ற அபிநிவேசத்தையும் விலக்கிய மகான்களாவர்.
அவர்கள் வழிபடும் “ஸாதா” எனும் இந்தக் கலையின் அம்சமே சூரியகலையும் சந்திரகலையும் அக்னிகலையும்,
அது சூரியனைப் போல் இருளைப் போக்குவதாயும், சந்திரனைப் போல் தாபத்தை நீக்குவதாயும்,
அக்கினியைப் போல் புண்ணிய கர்மாக்களை விரைவில் பக்குவப்படுத்துவதாயும் விளங்குவது.
இந்த உபாஸனையால் துக்கமே வராமல் தடுத்து என்றென்றும் ஆனந்தமாக வாழலாம். “இன்பமே எந்நாளும்
துன்பமில்லை”
ஷட்கோண சக்கரத்தின் மத்தியில் பிந்துவை எழுதி அதன் மேல் ஐந்து முகமுள்ள
தீபத்தை ஏற்றிவைத்து தேவியை ஆவாஹனம் செய்து பூஜித்து ஆயிரம் தடவையோ, முன்னூறு தடவையோ,
நூறு தடவையோ இந்த ஸ்லோகத்தை தினந்தோறுமோ, அல்லது வெள்ளிக்கிழமை பௌர்ணமி போன்ற விசேஷ
நாட்களிலோ பாராயணம் செய்தல் உபாஸனை செய்யும் வழிகளில் ஒன்றாகும்..
ஆவாஹன மந்திரம்:
மஹாபத்ம-வனாந்ததே காரணானந்த விக்ரஹே! ஸர்வபூதஹிதே மாதா: ஏஹ்யேஜி பரமேஸ்வரி!!

No comments:
Post a Comment