ஸ்லோகம் 40
தடித்வந்தம் சக்த்யா திமிர-பரிபந்தி-ஸ்புரணயா
ஸ்புரந்-நானாரத்னாபரண-பரிணத்தேந்த்ர தனுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக-சரணம்
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர-தப்தம் த்ரிபுவனம் ||
மணிபூரகத்தில் மேகத்திடை மின்னல் கொடி போன்றவள்
(நல்ல கனவு பலித்தல், கெட்ட கனவு விலகுதல், லக்ஷ்மீ கடாக்ஷம்)
(தவ) உன்னுடைய (மணிபூர-ஏக சரணம்) மணிபூரக சக்கரத்தை முக்கியமான உறைவிடமாகக்
கொண்டதும், (திமிர-பரிபந்தி-ஸ்புரணயா) இருட்டுக்குச் சத்துரு போல் பிரகாசிக்கும் (சக்த்யா)
பராசக்தியாகிற (தடித்வந்தம்) மின்னல் கொடியுடன் கூடியதும், (ஸ்புரன் நரனா ரத்ன-ஆபரண-பரிணத்த-இந்த்ரதனுஷம்)
ஜ்வலிக்கும் நானாவிதமான ரத்ன ஆபரணங்களாகிய இந்திர வில்லுடன் கூடியதும், (ச்யாமம்) கருத்ததும்
(ஹர-மிஹிர-தப்தம்) ருத்ரனாகிய பிரளயகால சூரியனால் எரிக்கப்பட்ட (த்ரிபுவனம்) மூவுலகையும்
(வர்ஷந்தம்) மழைபொழிந்து குளிரச் செய்வதும் ஆகிய, (கம்பி மேகம்) அதிசயமான மேகம் போன்ற
உனது ஸதாசிவ தத்துவத்தை (நிஷேவே) சேவிக்கின்றேன்.
குறிப்பு:
“ஸ்மரமிஹிரதப்தம்’ என்ற பாடத்தில் ஆசை என்கிற சூரிய வெப்பத்தால் எரிக்கப்பட்ட
உலகம் எனக் கருத்து. “தம:ச்யாமம்” என்ற பாடத்தில் இருட்டுப் போல் கறுத்தது என்று அர்த்தம்.
(அக்னேராப:) அக்கினியில் இருந்து ஜலம் தோன்றுகிறது. ஜலத்திற்கு இருப்பிடம்
மணிபூரக சக்கரம். இது பத்து தள கமலம். இங்கு மகேஸ்வரன்-ஸ்திரஸௌதாமினீ என்று சிவனையும்
சக்தியையும் உபாசிக்க வேண்டும். இவர்களுக்கு அம்ருதேஸ்வரன்-அமிருதேஸ்வரி என்ற பெயரும்
பொருந்தும். இவர்களை ஸத்யோஜாதம் வாமதேவம் முதலிய 52 ஜலமயூகங்களால் சூழப் பெற்றவர்களாய்
தியானிக்க வேண்டும்.
பாரத பூமியில் இதற்கேற்பட்ட ஸ்தானம் திருவானைக்காவல்

No comments:
Post a Comment