ஸ்லோகம் பத்து
ஸுதாதாராஸாரைச்-சரணயுகலாந்தர்-விகலிதை
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய-மஹஸ:!
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகதிப-மத்யுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி !!10!!
மூலாதாரம் (சரீர சுத்தி, வீர்ய விருத்தி)
(சரண-யுகள-அந்தர்-விகிலிதை:) திருஷ்டிகள் இரண்டின் இடையிலிருந்து பெருகும்
(ஸுதா-தாரா-ஆஸாரை:) அமிருத தாரையின் பிரவாகத்தால் (ப்ரபஞ்சம்) ஐம்பூதங்களாலான் உடலிலுள்ள
நாடிகள் எல்லாவற்றையும் (ஸிஞ்சந்தீ) நனைப்பவளாய் (ரஸ-ஆம்னாய-மஹஸ:) அமிருத கிரணங்களைப்
பொழியும் சந்திர மண்டலத்திலிருந்து (வாம்) உனது (பூமிம்) இயற்கையான இருப்பிடமாகிய மூலாதாரத்தை
(புன: அபி) மறுபடியும் (அவாப்ய) அடைந்து (புஜக-நிபம்) பாம்பைப் போல் (அத்யுஷ்ட-வலயம்)
குண்டலவடிவாக (ஸ்வம்) உன்னுடைய (ஆத்மானம்) உருவத்தை (க்ருத்வா) செய்து கொண்டு (குஹரிணி)
சிறுதுவாரமுடைய (குலகுண்டே) மூலாதார குண்டத்தில் (ஸ்வபிஷி) உறங்குகிறாய்.
முன் ஸ்லோகத்தில் குண்டலினீ சக்தியின் ஆரோஹணம் சொல்லப்பட்டது,. இங்கு அவரோஹணம்
சொல்லப்படுகிறது. ஸஹஸ்ராரத்தில் பரமசிவனுடன் கூடியிருந்து ஆனந்த வெள்ளத்தைப் பெருக்கி
அதனால் உடலில் உள்ள எல்லா நாடிகளையும் நனைத்து விட்டு மீண்டும் மூலாதாரத்திற்கு தேவி
வருகிறாள்.
குலகுண்டம் – ‘கு’ என்றால் பிருதிவீ தத்துவம். அது மூலாதாரத்தில் லயமடைவதால்
மூலாதார சக்கரம் குலகுண்டம் எனப்படும். அதின் நடுவில் தாமரையில் இருப்பது போல் ஒரு
கிழங்கு இருப்பதாகவும் அதின் நடுவில் ஒரு ஸூக்ஷ்மமான துவாரம் இருப்பதாகவும் அதில் தலையை
வைத்துக் கொண்டு மூன்றரை வட்டவடிவில் குண்டலமிட்டுக் கொண்டு தாமரை நூல் போல் மெல்லிய
பிழம்புவடிவில் குண்டலினீ சக்தி உறங்குவதாகவும் கூறப்படுகிறது.
(அம்ருதஸ்ய தாரா பஹுதா தோஹமானம்
சரணம் நோ லோகே ஸுதிநாம் ததாது) தேவியின் சரணமகலங்களில் இருந்து பெருகும் அமிருத தாரை
பக்தர்களாகிய நம்மைச் சிறந்த புத்தியுடையவர்களாக்கிப் போஷிக்கட்டும். (ஆருணம்)
பக்தன் பத்மாஸத்தில் அமர்ந்து கும்பகப் பிராணாயாமம் செய்து ஸ்ரீவித்யா பீஜத்தை
மானஸீகமாக ஆவிருத்த்ஹி செய்தால் குண்டலினீ சக்தி உறக்கம் விட்டெழுந்து ஆறு சக்கரங்களையும்
கடந்து ஸஹாஸ்ராரத்தில் திவ்யரூபத்தோடு காட்சியளிப்பாள்.

No comments:
Post a Comment